சென்னையில் கல்வி நட்சத்திர விருது பெற்ற மானாமதுரையை சேர்ந்த இளைஞர்.
தலைநகர் சென்னையில் உள்ள நாரத காண சபை அரங்கத்தில் மே 25 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற 'அறம் விருதுகள் 2024' விழாவில் 'அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை' தேர்வுக்குழு உறுப்பினராகளால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த தமிழ் இலக்கிய ஆசிரியர் திரு தமிழ்செல்வம் அவர்களை தேர்வு செய்து 'கல்வி நட்சத்திர விருது' என்ற பிரிவின் கீழ் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது பெற்று மானாமதுரை நகருக்கு பெருமை தேடித்தந்த தமிழ் செல்வம் அவர்களை குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டு வருகின்றனர். மேலும் தமிழ்செல்வம் மானாமதுரை நாம் தமிழர் கட்சி மேற்கு நகர துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment