இளையான்குடி அருகே ஆழி மதுரை ஸ்ரீ சோனையா கோவில் நூதன ஆலய வருஷாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் ஆழிமதுரை கிராமத்தில் அமைந்துள்ள ஆழிமதுரை, சிறுபாலை ஸ்ரீ சோனையா கோவிலின் பங்காளிகளுக்கு பத்தியபட்ட ஸ்ரீ சோனையா சுவாமி கோவில் நூதன ஆலய வருஷபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு ஹோமம், யாகங்கள், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக பெரும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ சோனையா சுவாமியின் அருளாசி பெற்றனர். மேலும் இவ்விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாபெரும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment