மானாமதுரை வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 24 May 2024

மானாமதுரை வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

 


மானாமதுரை வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகில் இயங்கி வரும் இந்தியன் வங்கியின் மானாமதுரை கிளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் பட்டாசை வெடிக்க வைத்து பூட்டை உடைத்து உள்ளே சென்ற பின், காசாளர் அறையில் பணம் நகை ஏதும் சிக்காத காரணத்தாலும், பெட்டக அறையின் அருகே பாதுகாப்பு அலாரம் மற்றும் பாதுகாப்பு பெட்டக கதவுகளை திறக்கும் ஆயுதங்கள் ஏதுமில்லாத காரணத்தாலும் கொள்ளை முயற்சியில் இருந்து தப்பி சென்றார். இதனால் வங்கிக் கிளையில் உள்ள பணம் மற்றும் நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது.


அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு டோங்கரே பிரவீன் உமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உடனடியாக குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை இந்தியன் வங்கி கிளையில் உள்ள சிசிடிவி கேமரா ஒளிப்பதிவு ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மானாமதுரை முத்துநகர் மேட்டுத்தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் பிரசாந்த் இக்கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, போலீசார் பிரசாந்தை கைது செய்தனர். மேலும் பிரசாந்த் மீது நான்கு குற்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.


இதற்கிடையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை விரைந்து கைது செய்த திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளர் திரு நாகராஜன் அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் வேல்முருகன், பிரபு, சதீஷ்குமார், சக்கர மணிகண்டன், ராஜா, நாகமணிமாறன் ஆகியோரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் சந்தித்து பாராட்டிய பின்னர் சான்றிதழ்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad