சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய காவலர் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாத செப்டிக் டேங்க் ஒன்று திறந்த நிலையில் இருந்துள்ளது, இந்த செப்டிக் டேங்கில் எதிர்பாராத விதமாக கன்று குட்டி ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடி கத்தியதை தொடர்ந்து அவ் வழியாக வந்த சமூக ஆர்வலர் முகமது அபூபக்கர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்திருந்தார்., அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் வெற்றிவேல் பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் அடங்கிய தீயணைப்பு குழுவினர் செப்டிக் டேங்கில் நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய கன்று குட்டியை பாதுகாப்பாக கயிறு கட்டி மீட்டனர்.,மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த செப்டிக் டேங்க் பல நாட்களாக திறந்த நிலையிலே இருப்பதாகவும் அங்கு விளையாடும் சிறுவர்கள் இந்தக் குழிகளில் விழுந்து விபரீதம் ஏற்படுவதற்குள்ளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த தொட்டியினை உடைத்து அகற்ற வேண்டும் அல்லது தற்காலிகமாக சிமெண்ட் மூடிட்டுகொண்டு மூடி வைக்க வேண்டும் என்று ஒருவித பதற்றம் கலந்த வேதனையுடன் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment