தாயமங்கலத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை, சீரமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா தாயமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட தாயமங்கலம் அரசு மதுபானக் கடைக்கு மேற்கு புறத்தில் தாயமங்கலத்தில் இருந்து ஏந்தல், கலைக்குளம் ஆகிய ஊர்களின் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான தார் சாலை குண்டு குழியுமாக மிகவும் மோசமான நிலையில், பயணிகளின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் இருந்து வருவதாக அப்பகுதி கிராம பொதுமக்கள் கடும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இத்தார்சாலையானது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை எனவும், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சீர்கெட்டு கிடக்கிறது எனவும் பொதுமக்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர்.
இதற்கிடையில் கடந்த 4 வருடங்களாக மிகவும் மோசமான நிலையிலை எட்டிய இச்சாலை மழை காலங்களில் குளம்போல் மாறி காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக தான் கல்யாணி, சொக்கனேந்தல், பாச்சட்டி, ஓடைக்குளம், இரும்பூர் , பெரியகண்ணூர் உட்பட பல கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்ல, தங்கள் வாகனங்களில் பயணிக்க உபயோகப்படுத்தி வருகின்றனர். கூடுதலாக பள்ளி கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகள் உள்ளிட்டோர் மிகுந்த மன வேதனை மற்றும் மனஉளைச்சலோடு இச்சாலையில் தினந்தோறும் பயணித்து வருகின்றனர்.
மேலும் சாலையின் நிலை மிக மோசமடைந்து வருவதை எடுத்துக் கூறி, சரிசெய்து தருமாறு பல முறை புகார்கள் பல தெரிவித்தும் அதிகாரிகள் தரப்பிலிருந்து இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலையை சீரமைத்து, புதிய சாலை அமைத்து தறுமாறு சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்கள் வலியுறுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா செய்தியாளர் டிசோன்
No comments:
Post a Comment