நாட்டரசன்கோட்டை அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் வைகாசி பெருந்திருவிழா வெள்ளிரத ஊர்வலம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் வைகாசி பெருந்திருவிழா மே மாதம் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக வெள்ளிரத ஊர்வலம் பக்தர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமையப்பெற்று வெகு சிறப்பான வரவேற்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பக்தகோடி பெருமக்கள் ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மனின் அருள் பெற வேண்டி பெரும் திரளாக கலந்து கொண்டனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment