சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீராம் நகர் அருகே அமைந்துள்ள பிரமிடு ஐஏஎஸ் அகாடமி வெற்றியாளர்கள் சாதனையாளர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் நகர் மற்றும் கிராம திட்டமிடல் இயக்கம் ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளில் பொறியியல் துறை சார்ந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ள மேற்பார்வையாளர்கள் இளநிலை வரைவு அலுவலகர் இளநிலை பொறியியலாளர் வரைவாளர் பதவிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிக்கை எண் 05/2023,03.02.20.23, அன்று வெளியிடப்பட்டது.
மொத்தம் உள்ள 1116 சிவில் இன்ஜினியரிங் காலி பணியிடங்கள் காண எழுத்து தேர்வு 27. 5. 2023 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 15 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 19.9.2023 அன்று வெளியிடப்பட்டது.
மதிப்பெண்கள் தரவரிசைப்படி 03.04.2024, முதல் 10.04.2024, வரை கலந்தாய்வு டி என் பி எஸ் சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை மையமாகக் கொண்டு செயல்படும் நமது பிரமிட் ஐஏஎஸ் அகாடமி -ல் பயிற்சி பெற்ற சிவில் இன்ஜினியர்களின் 712 (JE &JDO overseer, draftsman ) பேர் மாநில அரசுகளின் பணியிடம் உறுதி பெற்றுள்ளனர். இதில் 26 மாணவர்கள் அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் அகடமையில் இலவசமாக பயிற்சி பெற்று இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பொறியியல் துறை சார்ந்த பல்வேறு மத்திய மாநில அரசுகளின் பணி நிலைகளில் பிரமிட் ஐஏஎஸ் அகாடமி இல் பயின்ற மாணவர்கள் உயர்ந்த பதவியில் உள்ளனர் 2007 இல் இருந்து மாநில அரசின் அனைத்து பொறியியல் சார்ந்த பணியிடங்களில் 60-75% வரை பிரமிடு ஐ ஏ எஸ் அகாடமி இல் பயின்ற மாணவர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர் இந்த தேர்வு முடிவுகளும் அதை மெய்ப்பிக்கிறது.
இவ்வாண்டு நடைபெற்ற மேற்பார்வையாளர் இளநிலை மறைவு அலுவலர் இளநிலை பொறியாளர் வரைவாளர் பதவிக்கான தேர்வில் சிவில் இன்ஜினியரிங் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களில் மொத்தமுள்ள 1116 காலி பணியிடங்களில் 712 பணியிடங்களை பிரமிட் ஐ ஏ எஸ் அகாடமியில் பயின்ற மாணவர்கள் பெற்றுள்ளனர்.
சாதனையாளர்கள் வெற்றியாளர்கள் சந்திப்பு விழா 12.05.2024 அன்று பிரமிடு ஐ ஏ எஸ் அகாடமியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment