மானாமதுரை பாபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொழிலாளர் தினமான மே தினம் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 1 May 2024

மானாமதுரை பாபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொழிலாளர் தினமான மே தினம் கொண்டாடப்பட்டது.


 மானாமதுரை பாபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொழிலாளர் தினமான மே தினம் கொண்டாடப்பட்டது.


உலகில் உள்ள அனைத்து தொழிலாளிகளையும் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஒன்றாம் தேதியில் உலக தொழிலாளர் தினம் அனுசரிக்கப்படுவது வழமை. எனவே இந்த ஆண்டு தங்களின் அயராது உடல் உழைப்பால் உழைத்துக் கொண்டிருக்க கூடிய அனைத்து தொழிலாளர்களுக்கும் மற்ற ஏனைய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பாக இனிய மே தின நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடிவரும் இவ்வேளையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் தொழிலாளர் தினத்தை அனுசரிக்கத்து கொண்டாடும் விதமாக கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அனைத்து பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் பள்ளியின் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் இந்நிகழ்வில் சிறந்த ஆசிரியர் மற்றும் சிறந்த முறையில் பணியாற்றிய பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இவ்வினிய விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் அம்மா பி. ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். கூடுதலாக பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் மற்றும் பள்ளியின் ஆட்சியர் திருமதி ஆர். மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மேற்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad