அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று துறையில் 22 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்கள் சந்திப்பு .
அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று துறையில் 1999- 2002 ஆம் கல்வியாண்டில் இளங்கலை வரலாறு பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தா லெட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் வரலாற்று துறைத் தலைவர் முனைவர் நிலோபர் பேகம் தலைமை வகித்தார். கல்லூரியின் முன்னாள் தமிழ் துறைத் தலைவர் முனைவர் முருகேசன், வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர் தட்சிணாமூர்த்தி, மற்றும் வரலாற்று துறை பேராசிரியர்கள் முனைவர் முத்துக்குமார், முனைவர் மார்ட்டின் ஜெயபிரகாஷ், முனைவர் குணசேகரன், முனைவர் வேலாயுத ராஜா முனைவர் சரவணன், முனைவர் கிளிமொழி மற்றும் முனைவர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
22 ஆண்டுகளுக்கு முன்பு தங்களிடம் பயின்ற மாணவர்கள் தற்பொழுது வழக்கறிஞராகவும், ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஆசிரியராகவும், தொழில் முனைவோராகவும், பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ மாணவிகள் தங்களின் கல்லூரிக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு தாங்கள் பயின்ற வரலாற்றுத் துறைக்குத் தேவையான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் ஸ்மார்ட் போர்டு சாதனம் ஆகியவற்றை வாங்கித் தருவதாக உறுதி அளித்தனர்.
கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை முன்னாள் மாணவ மாணவிகளான சர்மிளா, மேனகா, சசிகலா மற்றும் செபஸ்தியான் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment