மானாமதுரையில் முன்னாள் இந்திய பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் 33 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 21 May 2024

மானாமதுரையில் முன்னாள் இந்திய பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் 33 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

 


மானாமதுரையில் முன்னாள் இந்திய பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் 33 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 


இந்திய திருநாட்டின் ஒன்பதாவது பிரதமராக பதவி வகித்தவர் பாரதரத்னா மாண்புமிகு திரு ராஜிவ் காந்தி ஆவார். திரு ராஜிவ் காந்தி அவர்களின் 33வது நினைவு நாள் தினமான மே 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி சிலை வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திரு சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையிலும், நகரத் தலைவர் திரு புருஷோத்தமன் மற்றும் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு ராஜூவ் கண்ணா ஆகியோரின் முன்னிலையிலும் திரு ராஜிவ் காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மலர் தூவி நினைவஞ்சலி மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி பின்வருமாறு, அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம் எவ்வகையான பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். இந்தியா இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு. ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் அனைவரும் சம வாய்ப்பு பெறுவதே சமதர்மம். அரசு எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதே சமயச் சார்பின்மை.  


எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, மதநல்லிணக்க நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும், உடமைகளுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைசக்திகளை எதிர்த்துப் போராடவும், பயங்கரவாதத்தை அனைத்து நிலைகளிலும் எதிர்த்தும் அமரர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளான இன்று நாம் உறுதி ஏற்கிறோம் என்று அனைவரும் ஒன்றாக உறுதிமொழி ஏற்றனர். 


இந்நிகழ்வில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட, நகர, வட்டாரங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நினைவு தினத்தை அனுசரித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad