முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் அவர்களின் 21ஆம்‌ ஆண்டு நினைவஞ்சலி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 21 May 2024

முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் அவர்களின் 21ஆம்‌ ஆண்டு நினைவஞ்சலி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பு.

 


முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் அவர்களின் 21ஆம்‌ ஆண்டு நினைவஞ்சலி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பு.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொம்புக்கரனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தா. கிருட்டிணன். இவருடைய மனைவி பெயர் பத்மா. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் இருமுறை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். கடந்த 1996ம் ஆண்டு சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 20ஆம் தேதியன்று கொம்புக்கரனேந்தல் செல்லும் வழியில் அமைந்துள்ள தா. கிருட்டிணன் அவர்களின் மண்டபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். 


எனவே இந்த ஆண்டு முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்ட கழக செயலாளருமான திரு தா. கிருட்டிணன் அவர்களின் 21-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சரும், மாவட்டக் கழகச் செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் கிருட்டிணன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தி நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், தா. கிருட்டிணன் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த சொந்த பந்தங்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad