மானாமதுரை நகர அஇஅதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி சிலை அருகில் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு பி. ஆர். செந்தில்நாதன் அவர்கள் தலைமையிலும், மானாமதுரை நகரச் செயலாளர் திரு விஜி போஸ் அவர்களின் முன்னிலையிலும் கோடைகால வெப்பத்தை தணிக்கும் பொருட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் நாகராஜ், சின்னை மாரியப்பன், எஸ். பி. சுப்பிரமணியன், வி. அக்னிராஜ், மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி குழந்தை பாண்டியன், ஆர். மகேந்திரன், ஜி பாண்டி, ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், நகர் கழக செயற்குழு உறுப்பினர் குருசங்கர், ஆர். ஆறுமுகம், ஜோதிமணி, சரவணன், அழகுபாண்டி, நாகராஜ், சி. பி. சரவணன், கருப்புசாமி, விஜயமார்த்தாண்டன், ஜி. சண்முகம், பழனிகுமார், காளி, ஜி. துரைப்பாண்டி மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment