மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி, மர்ம நபர்கள் கைவரிசை, காவல்துறை வலைவீச்சு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாசிலை அருகே செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. மானாமதுரை பிரதான நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிமாற்றம், தங்க நகைக்கடன் மற்றும் லாக்கர் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு கோடிக் கணக்கில் வரவு செலவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமை வங்கி விடுமுறை என்பதால் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டு வங்கியில் உள்ள பக்கவாட்டு சுற்றில் உள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்தும், நுழைவு வாயிலில் உள்ள கதவின் பூட்டை உடைத்தும் உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
இதற்கிடையில் வழக்கம்போல் திங்கட்கிழமை காலை வங்கி ஊழியர்கள் வந்து பார்த்தபோது வங்கியில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு, உடனடியாக மானாமதுரை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து டிஎஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். எனவே இச்சம்பவ செயல் மானாமதுரை நகர் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment