சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி வார்டு எண் 21, 22 மற்றும் 23ல் உள்ள வாக்காளர் பெருமக்களை சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களை கை சின்னத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றிபெற வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் மூலமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்து மாண்புமிகு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் காலை சுமார் 8 மணி முதல் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டார்.
இதில் மானாமதுரை திமுக நகர செயலாளர் பொன்னுசாமி, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment