காரைக்குடியில் இன்று காலை 8:30 மணி அளவில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 April 2024

காரைக்குடியில் இன்று காலை 8:30 மணி அளவில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் காலனியில்  அமைந்துள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் இருந்து கொடி அணி வகுப்பு காவல்துறையினரால் தமிழ்தாய் கோவில் சாலை, அண்ணாநகர் வழியாக கழனிவாசல் புது ரோடு, முத்துப்பட்டினம், செக்காலை ரோடு, பெரியார் சிலை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக வந்து புறப்பட்ட இடமான காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள அணி வகுப்பு மைதானம் வரை காவல்துறையினரும் சி ஆர் பி எப் வீரர்களும் நெஞ்சை நிமிர்த்தி காவல் சீருடையுடன் துப்பாக்கி ஏந்தி மிடுக்கான தோற்றத்துடன் அணிவகுப்பு  நடைபெற்றது. 

இதில் 100க்கும் மேற்பட்ட சி ஆர் பி எப் வீரர்களும் காரைக்குடி மதுவிலக்கு துறை ஏ எஸ் பி பிரான்சிஸ்,  டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோரின் தலைமையில் காரைக்குடி சரகத்துக்கு உட்பட்ட நான்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட  காவலர்களும் கலந்து கொண்டனர் இந்த அணிவகுப்பு தேர்தல் விழிப்புணர்வுக்காகவும், பொதுமக்கள் தேர்தலினால் எந்த வித அச்சமும் இன்றி சுதந்திரமாக தேர்தல் நாளில் வாக்களிக்க காவல்துறை பொது மக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை பறைசாற்றும் விதமாகவும் இந்த அணிவகுப்பானது நடத்தப்பட்டது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணிவகுப்பை கண்ட பொதுமக்கள் ஆச்சரியதுடனும்  வியப்போடும் பார்வையிட்டனர். 


- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன் 

No comments:

Post a Comment

Post Top Ad