மானாமதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 9 April 2024

மானாமதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில், நடந்த முடிந்த அரசு பொதுத்தேர்வை தொடர்ந்து இப்பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 'பிரிவு உபசரிப்பு விழா' பள்ளி வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் நிறுவனர் அம்மா பி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமை தாங்க, பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் மற்றும் பள்ளியின் ஆட்சியர் திருமதி ஆர். மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மற்றும் ஆசிரிய பெருமக்கள் மேற்கொண்டனர்.

இதில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அடுத்த வகுப்பிற்கான விழிப்புணர்வு கருத்துக்களும் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்பட்டது. கூடுதலாக பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தங்களை ஊக்கப்படுத்திய பள்ளிக்கு நாற்காலிகளை நினைவு பரிசாக வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad