சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு சேவியர் தாஸ் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் அவர்களுக்கு மானாமதுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மானாமதுரை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், நகர் கழக செயலாளர், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment