சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கன்னார் தெரு பிரதான சாலையில் இந்திய பாராளுமன்ற தேர்தல் 2024க்கான இந்தியா கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் ஈடுபட்டார்.
இதில் பேசிய அமைச்சர் அவர்கள் ஆளும் ஒன்றிய பாஜக அரசின் அவல நிலையை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகிலும் இந்தியா கூட்டணி கட்சியினர் கை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், நகர் கழக செயலாளர் பொன்னுசாமி, காங்கிரஸ் கமிட்டி முன்னோடி ஏ. ஆர். பி. முருகேசன், நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment