காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முத்தமிழ் விழா மற்றும் நுண்கலை மன்ற விழா நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 April 2024

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முத்தமிழ் விழா மற்றும் நுண்கலை மன்ற விழா நடைபெற்றது.


காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில்  முத்தமிழ் விழா மற்றும் நுண்கலை மன்ற விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமை வகித்த கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி  எம் மொழியும் அறிவு சேர்க்கும், தாய் மொழியே உள்ளம் சேர்க்கும் என்று கூறினார். முத்தமிழ் மன்ற விழாவில் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் முனைவர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். 

இயற்றமிழ் தொடர்பாக  பைந்தமிழ்ச்செல்வி புதுக்கோட்டை பாரதி தரணி ஆளும் தமிழ் என்ற தலைப்பில் வாழ்க்கையின் எல்லா கட்டங்களுக்கும் தேவையான அறிவையும் ஆற்றலையும் தருவது தமிழ் என்று பேசினார். அதுபோல நாடகத் தமிழில் நாடகம் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் தமிழ் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் காளிமுத்து நடிப்புடன் கூடிய உரை நிகழ்த்தினார். இசைத்தமிழில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், பாடகருமான ஆந்தக்குடி இளையராஜா மக்களிசை மண்ணிசை என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தினார். 


இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் துரை முன்னிலை வகித்தார். பேராசிரியர் முனைவர் சிதம்பரம் நன்றி கூறினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நுண்கலை மன்ற விழாவில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் சார்பாக, ஆண்டு முழுவதும் நடைபெற்ற மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. 


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓவிய ஆசிரியர் பார்த்திபன் கல்லை சிற்பி பார்த்தால் அது சிற்பம் ஆவது போல ஆசிரியர்கள் நினைத்தால் ஒரு சாதாரண மாணவனை சாதனை மாணவனாக மாற்றலாம் என்று கூறினார். நுண்கலை மன்ற ஆண்டறிக்கையை கல்லூரியின் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனனவர் மார்ட்டின்ஜெயப்பிரகாஷ் வாசித்தார். நிகழ்ச்சியில் நுண்கலை மன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஷர்மிளா பேராசிரியர் முனைவர்  முனைவர் செல்வ மீனா, முனைவர் லட்சுமண குமார் மற்றும் பேராசிரியர்களும் ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad