இந்திய பாராளுமன்ற தேர்தல் 2024 தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் வேகமெடுத்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் 2024 க்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துப்பாக்கி ஏந்திய இந்திய துணை ராணுவ படை வீரர்கள் சனிக்கிழமை மாலை வருகை புரிந்தனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு டோங்கரே பிரவீன் உமேஷ் அவர்களின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ படை வீரர்களின் அணிவகுப்பானது மானாமதுரை பழைய பேருந்து நிலையம் தொடங்கி மானாமதுரை நகர் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளின் வழியாகச் சென்று சிஎஸ்ஐ பள்ளியை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment