சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறையில் 1981-84 ஆம் கல்வியாண்டில் பி.எஸ்.சி. இயற்பியல் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் படித்த கல்லூரிக்கு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினர். கல்லூரியின் இயற்பியல் துறையில் நிறுவப்பட்டுள்ள இப்புதிய இயந்திரத்தையும், இயற்பியல் துறை முகப்பில் இம்முன்னாள் மாணவர்களால் ரூபாய் 1.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தோட்டத்துடன் கூடிய பேவர் பிளாக் பதித்த தரை தளத்தையும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ரவி அவர்கள் துவங்கி வைத்தார்.
மேலும் கல்லூரியின் முதுநிலை இயற்பியல் துறை ஆய்வகத்திற்கு தேவையான ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஆய்வக உபகரணங்களும் இம் முன்னாள் மாணவர்களால் வழங்கப்பட்டன. மேலும் இவர்கள் தற்போதுள்ள கல்லூரியின் உமையாள் கலையரங்கத்தை மேம்படுத்தி புதுப்பிக்கவும், பொது கழிப்பறை தொகுதிகள் அமைத்துக் கொடுக்கவும் , கூட்டுறவு பண்டகசாலைக்குத் தேவையான நகலெடுக்கும் இயந்திரம் வழங்கவும் ஆவண செய்ய இசைந்துள்ளனர்.
இந்நிகழ்வில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தா லெட்சுமி, இயற்பியல் துறைத்தலைவர் கவிதா, முன்னாள் மாணவர்கள் விஸ்வநாதன், செங்கையா ராமசாமி, சுப்பிரமணி, முருகன், சுந்தரராமன் மற்றும் பேராசிரியர்களும் ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment