சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக அறிவியல் புலத் தலைவர் முனைவர் ராக்கப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இக்கல்லூரியில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் படிப்பதால் வரும் காலங்களில் இந்நாட்டை ஆளப்போவது பெண்கள் தான் என்பதை உணர முடிகிறது என்றும் ஒவ்வொருவரும் தம் வாழ்வில் அவரவர் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு நம் வாழ்வில் பொறுப்போடு இருந்தால் நம் லட்சியத்தை அடைய முடியும் என்றும் சிறப்புரையாற்றினார்.
திரு. வயி.அ.அண்ணாமலை செட்டியார் திருமதி அ.அன்னபூரணி ஆச்சி நினைவு அறக்கட்டளையின் சார்பாக இளநிலை இயற்பியல்,கணினி அறிவியல், முதுநிலை இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளில் முதல் தரம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக காசோலை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு பாடப் பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இயற்பியல் துறை இணை பேராசிரியர் முனைவர் சுப்பு நன்றி கூறினார். இதில் ஆசிரியர்களும் ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment