இந்திய மக்களவை தேர்தலையொட்டி சிவகங்கை பாராளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்கள் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோருடன் இணைந்து வெள்ளிக்கிழமையன்று மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்தநேந்தல், சிறுகுடி, இடைக்காட்டூர், பெரும்பச்சேரி, வெள்ளிக்குறிச்சி, விளத்தூர், கலியாந்தூர், சுள்ளக்குடி, கட்டிக்குளம், வெள்ளைக்கரை, புலியூர், பொட்டப்பாளையம், நையினார்பேட்டை, அல்லிநகரம், கீழராங்கியம், மேலவெள்ளூர், முனியாண்டிபுரம், சாலைகிராமம் ஆகிய சுற்று வட்டாரங்களில் தனது வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் திமுக கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களை ஆதரித்து வியாழக்கிழமை அன்று மாலை மானாமதுரை நகராட்சி மற்றும் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை திமுக கட்சியின் தலைமை கழக பேச்சாளர் திரு திண்டுக்கல் லியோனி அவர்கள் கை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment