சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பரின் நினைவிடத்தில் வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் இந்தியா கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்ற வேட்பாளர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment