இரண்டு ஊர் கிராம பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு, வெறிச்சோடி காணப்பட்ட வாக்குச்சாவடி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 April 2024

இரண்டு ஊர் கிராம பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு, வெறிச்சோடி காணப்பட்ட வாக்குச்சாவடி.

 


இரண்டு ஊர் கிராம பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு, வெறிச்சோடி காணப்பட்ட வாக்குச்சாவடி.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தை சேர்ந்த கல்லூரணி மற்றும் சீத்தூர் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள் 2024 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வாக்களிக்க பொதுமக்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லாததால் வாக்குச்சாவடியானது வெறுச்சோடி காணப்பட்டு வருகிறது. இது குறித்து கிராம பொதுமக்களிடம் கூடுதல் விவரங்களை கேட்டபோது அவர்கள் கூறுகையில், கடந்த 2017 இல் இருந்து அடிப்படை வசதிகளான சாலை வசதிகள் அமைத்திடவும், கண்மாய் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்திடவும் தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக வலியுறுத்தி வருவதாகவும், மேலும் இளையான்குடி பெரிய கம்மாயிலிருந்து வாய்க்கால் வழியாக விவசாயத்திற்கு வரும் பாசன நீரில் சாக்கடை மற்றும் கழிவுநீர் கலந்து மாசு ஏற்படுவதை தடுக்கவும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம் எனவும், எங்களுடைய இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் சாலை மறியல் போராட்டம், குடியமர்வு போராட்டம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக முற்றுகை போராட்டம் உள்ளிட்ட மூன்று கட்டப் போராட்டங்களை கிராம பொதுமக்கள் முன்னெடுத்துள்ளனர். 



இப்போராட்டங்களை முன்னெடுத்தபோது அப்போது பணியில் இருந்த பிடிஓ அவர்கள் மூன்றே நாளில் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்ததை குறிப்பிட்டனர். கூடுதலாக மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஆறு முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்தது குறைகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ஆறு முறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை என்றனர். பின்னர் ஒருவழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்ற அதிகாரிகளும் கண்மாயை பார்வையிட்டதோடு எவ்வித நடவடிகையும் மேற்கொண்டு எடுக்கவில்லை. கழிவுநீர் கன்மாயில் கலப்பதை தடுத்து நிறுத்த கோரிய ஊர் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறாததால் சிவகங்கை மாவட்டம் சீத்தூர் மற்றும் கல்லூரணி கிராமங்களை சேர்ந்த சுமார் 800க்கும்  மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். 



இதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் இளையான்குடி சேர்மன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர், ஆனால் முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களிடம் கிராம பொதுமக்கள் இதுவரை நிறைவேற்றப்படாத கோரிக்கை இனிமேல் எப்படி நிறைவேறும் என்று கேள்வி எழுப்பினர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்குள் எங்களுக்கு இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருமாறும் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad