மானாமதுரை ரயில்வே காலனியில் சீரடி சாய்பாபா அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 April 2024

மானாமதுரை ரயில்வே காலனியில் சீரடி சாய்பாபா அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 


மானாமதுரை ரயில்வே காலனியில் சீரடி சாய்பாபா அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இரயில்வே காலணி ஆதனூர் பிரதான சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நலன் தரும் சீரடி சாய்பாபா ஆலயத்தில் சீரடி சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டும், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டும் பூத்தட்டு ஊர்வலம், அபிஷேக ஆராதனை, பூ அர்ச்சனை, நாராயண சேவை அன்னதானம் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் பக்தகோடி பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை கோவில் டிரஸ்டி திருமதி பி. ராஜேஸ்வரி அம்மாள் மேற்கொண்டார். மேலும் அபிஷேகம் ஆராதனை ஆகியவற்றை அர்ச்சகர் திரு நாகமணி சிறப்புடன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad