மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம், தொண்டர்கள் அமோக வரவேற்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 12 April 2024

மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம், தொண்டர்கள் அமோக வரவேற்பு.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை நகராட்சியின் பிரதான சாலைகளில் உள்ள முக்கிய பகுதிகளில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியை (இந்தியா) சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்கள் தான் போட்டியிடும் கை சின்னத்திற்கு மாலை சுமார் 6 மணி முதல் வாக்கு வாக்காளர் பெருமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் தலைமை தாங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் மானாமதுரை திமுக நகர செயலாளர் க. பொன்னுசாமி, நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பால்சுந்தரம் மற்றும் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இப்பிரச்சாரத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம் அவர்கள் மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசின் விலைவாசி உயர்வு, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியில் பாரபட்சம், சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் போன்ற பாஜக அரசின் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதை கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூடுதலாக தான் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட்டது கிடையாது என்றும், அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான நபர் என்றும் தன்னிடமும் நிறை குறைகள் உண்டு எனவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய வேட்பாளர் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் விரிவான மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள தேர்தல் அறிக்கையை வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார். இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அவர்களை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தங்கள் மாபெரும் ஆதரவை அளித்து, வ துண்டு பிரசுரம் மூலமாக வாக்காளர் பெருமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad