மானாமதுரை பேருந்து நிலையத்தில் தொடரும் அவல நிலை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 12 April 2024

மானாமதுரை பேருந்து நிலையத்தில் தொடரும் அவல நிலை.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கடைகளை சேர்ந்த வியாபாரிகள் தங்கள் வாகனங்களை பொதுமக்கள் அமரும் இடங்கள் மற்றும் பயணிகள் காத்திருப்பு இருக்கைகள் மத்தியில் பயணிகளுக்கு தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தி வருவது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு தேவையான வியாபார பொருட்கள் மற்றும் காய்கறிகளை மூடை மூடையாக சேமித்து வைக்கும் குடோனாகவும், கடைகளுக்கு தேவையான காய்கறிகளை அமர்ந்து நறுக்குவதற்கும், தங்களின் சொந்த இடமாக நினைத்து பயணிகள் ஓய்வெடுக்கும் இருக்கைகளை உபயோகப்படுத்தி வருகின்றனர். 

ஏற்கனவே புதிய பேருந்து நிலையத்தில் கட்டண வாகன நிறுத்துமிடம் செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வியாபாரிகளின் இந்த இடையூறு காரணமாக பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் ஆகியோர் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள காத்திருக்கும் இடங்களில் உள்ள இருக்கைகளில் அமர இடவசதி இல்லாத நெருக்கடியில் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். 


கூடுதலாக பேருந்து நிலையத்திற்குள் உரிய அனுமதியின்றி இடையூறாக பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் இரு சக்கர வாகனங்களுக்கு அபதாரம் விதிக்கும் காவல்துறையினர், வியாபாரிகளின் இந்த அவல செயலை கண்டுகொள்வது கிடையாது என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இப்பிரச்சனையை சரி செய்து, தக்க நடவடிக்கை எடுத்து தர வலியுறுத்தி பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad