மானாமதுரை வைகை ஆற்றில் ராட்டினங்கள் இயக்கப்படாததால் குழந்தைகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 April 2024

மானாமதுரை வைகை ஆற்றில் ராட்டினங்கள் இயக்கப்படாததால் குழந்தைகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றம்.

 


மானாமதுரை வைகை ஆற்றில் ராட்டினங்கள் இயக்கப்படாததால் குழந்தைகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றம்.



சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோயில் 2024 ஆம் ஆண்டுக்கான சித்திரை திருவிழா சித்திரை ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பெற்று சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் ஊர்வலங்கள் மற்றும் மண்டகப்படி ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வருட சித்திரை திருவிழாவானது வருடா வருடம் நடைபெறும் சித்திரை திருவிழாவைப் போல் இல்லாமல், சித்திரை ஒன்றாம் தேதி முதல் நாள் திருவிழா இரவு கலை நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. மற்றும் கூடுதலாக இரவு நேரங்களில் மானாமதுரை வைகை ஆற்றில் உள்ள ராட்டினங்களும் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படாமல் இருந்து வருவதால் சித்திரை திருவிழாவானது கலை இழந்து காணப்படுகிறது. 



இதன் காரணமாக மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்து வருகின்றனர். ராட்டினம் சுற்றப்படாத காரணத்தால் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் காணப்படாததால் வைகை ஆற்றில் இத்திருவிழாவை நம்பி கடை போட்டுள்ள கடை வியாபாரிகள் வியாபாரமின்றி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே பக்தர்கள் பொதுமக்கள் ஆகியோரின் கோரிக்கைகளை கோயில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சரி செய்ய வேண்டுமாறு சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்களின் சார்பாக வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad