பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களை ஆதரித்து சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டாரத்தில் உள்ள சுமார் 21 பஞ்சாயத்துகளில் புதன்கிழமையன்று மாண்புமிகு கூட்டுறவு அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் பட்டமங்கலத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கி கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இப்பிரச்சாரத்தில் கல்லல் ஒன்றிய கவுன்சிலர் டி. ஆர். எம். அழகப்பன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பெருமாள், வட்டாரத் தலைவர் இன்பென்ட் ஆரோக்கியராஜ், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் செந்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மேலும் நேற்று மாலை முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் நடிகர் திரு கருணாஸ் அவர்கள் திரு கார்த்தி சிதம்பரம் அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment