மானாமதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 April 2024

மானாமதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர்.


சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் அவர்கள் புதன்கிழமை காலை 11 மணி அளவில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தனது தேர்தல் பிரச்சாரத்தை மானாமதுரை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்டார். 

தொடர்ச்சியாக மானாமதுரை நகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனை எதிரில் பத்தாவது வார்டில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை பாஜக வேட்பாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சத்தியநாதன், மானாமதுரை நகர் தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பெருமளவில் கலந்து கொண்டனர். 


மேலும் வருகிற ஏப்ரல் ஐந்தாம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தர இருப்பதையடுத்து செவ்வாய்க்கிழமை காரைக்குடியில் பாஜக கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் திரு கேசவ விநாயகம் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad