அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 76 வது விளையாட்டு விழா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளைத் துவக்கி வைத்தார். கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் அசோக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவிலூர் ஆண்டவர் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவீந்திரன் சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார். குழு விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளும் தடகளப் போட்டிகளில் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளும் வெற்றி பெற்றனர். ஆண்கள் தனிநபர் சாம்பியனாக மாணவர் வேல்முருகனும் பெண்க
ள் தனி நபர் சாம்பியனாக மாணவி வைஷ்ணவியும் வெற்றி பெற்றனர்.
அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் செங்கையா ராமசாமி மற்றும் ராஜேந்திரன் சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளியல் துறைத் தலைவர் முனைவர் செல்வராஜ் நன்றி உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment