சிவகங்கை மாவட்டத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த நகை பறிப்பு அதிரடி காட்டி கைது செய்த செட்டிநாடு காவல்துறை - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 April 2024

சிவகங்கை மாவட்டத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த நகை பறிப்பு அதிரடி காட்டி கைது செய்த செட்டிநாடு காவல்துறை


சிவகங்கை மாவட்டத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த நகை பறிப்பு அதிரடி காட்டி கைது செய்த செட்டிநாடு காவல்துறை

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு அரசு கால்நடை பண்ணை அருகில் கணவன் மனைவி மற்றும் அவர்களது மூன்று வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் திருமயம் அருகில் விராலிமலை கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு சுவாமி கும்பிட புதுவயலில் இருந்து விராலிமலை  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அங்கிருந்து புதுவயலில் உள்ள அவர்களது வீட்டிற்கு வருவதற்காக சுமார் 4. 45 மணி அளவில் கானாடுகாத்தான் காரைக்குடி ரோட்டில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செட்டிநாடு அரசு கால்நடை பண்ணை அருகில் வந்து கொண்டிருந்த போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் பெண்ணின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செட்டிநாடு காவல்துறையினர் சிசிடிவி கேமராவின் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வழிப்பறி செய்த குற்றவாளி புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சாத்தப்பன் மகன் சக்திவேல் என்று  உறுதியானதை தொடர்ந்து குற்றவாளியை கைது செய்த குன்றக்குடி காவல் ஆய்வாளர் TR.வைத்தியநாதன் தலைமையிலான செட்டிநாடு நிலைய துணை ஆய்வாளர் R.பாண்டி உள்ளிட்ட காவல்துறையினர் காவல் நிலையதில் வைத்து குற்றவாளியிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் குற்றவாளியை கைது செய்து காவல் நிலையம் கொண்டுவரும் வழியில் சிறுநீர் கழிப்பதாக கூறி திருமயம் அருகே தப்பி ஓடி புதரில் மறைந்து கொண்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக காவலர்களுக்கு போக்கு காட்டியுள்ளான், காவலர்களின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர்  மீண்டும் குற்றவாளி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad