மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படி அமைக்கப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 April 2024

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படி அமைக்கப்பட்டது.

 


மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படி அமைக்கப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சித்திரை திருவிழா சிறப்பு நிகழ்வாக ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் மண்டகப்படி அமைக்கப்பட்டு, மாணவர்கள் சிலம்பம் சுற்றியும், அழகர் மற்றும் மீனாட்சி வேடம் அணிந்தும், ஆடல் பாடல் நிகழ்வுடன் கள்ளழகரை வரவேற்றனர். இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மோர், சர்பத் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


இச்சிறப்பான விழாவில் பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவை சிறப்பித்த மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் அம்மா பி. ராஜேஸ்வரி மற்றும் பள்ளியின் ஆட்சியர் திருமதி ஆர். மீனாட்சி ஆகியோர் பொன்னாடை அணிவித்து ஊக்குவித்தனர். மேலும் பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad