மானாமதுரை வைகை ஆற்றில் இறங்கிய ஸ்ரீ கள்ளழகர், ஆயிரக்கணக்கான பக்தகோடி பெருமக்கள் பங்கேற்றனர் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 April 2024

மானாமதுரை வைகை ஆற்றில் இறங்கிய ஸ்ரீ கள்ளழகர், ஆயிரக்கணக்கான பக்தகோடி பெருமக்கள் பங்கேற்றனர்

 


மானாமதுரை வைகை ஆற்றில் இறங்கிய ஸ்ரீ கள்ளழகர், ஆயிரக்கணக்கான பக்தகோடி பெருமக்கள் பங்கேற்றனர். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் சித்திரை 10 ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை காலை அன்று நடைபெற்றது. இவ்வைபோகத்தில் மானாமதுரை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடி பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பச்சை வண்ண பட்டு ஆடை அணிந்து பல்லக்கு குதிரையில் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். 



கடந்த சித்திரை ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட சித்திரை திருவிழாவானது சித்திரை எட்டாம் தேதி திருக்கல்யாணம், சித்திரை ஒன்பதாம் தேதி திருத்தேரோட்டம் என பக்தகோடி பெருமக்களின் ஆதரவோடு நடைபெற்றது. மேலும் சித்திரை திருவிழா ஆரம்பம் பெற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளும் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்த்த கிராம பொதுமக்களின் மண்டகப்படி, கலை நிகழ்ச்சி, வான வேடிக்கை என சித்திரை திருவிழாவிற்காக பக்தர்கள் கடந்த பத்து நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.



மேலும் சித்திரை திருவிழாவை சிறப்பாக நடைபெற நகர மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பாலசுந்தர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஆகியோர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்ட நெரிசல் மற்றும் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் ராட்டினங்களையும் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் பாதிப்பும் ஏற்படாதவாறு சித்திரை திருவிழாவானது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சித்திரை திருவிழாவிற்காக உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த காவல்துறையினர் இரவு பகல் பாராமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



பிரத்தியேகமாக இந்த ஆண்டு விழாவை சிறப்பித்து கொண்டாடும் விதமாக தேசிய உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் பி.கே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மானாமதுரை தேசிய உரிமைகள் கழக நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள் சார்பாக பக்தகோடி பெருமக்களுக்கு நீர் மோர் விநியோகம் செய்யப்பட்டது. இதில் மானாமதுரை தேசிய உரிமைகள் கழக நிர்வாகி பிரபாகரன் தலைமை தாங்கினார். மேலும் இதன் பாராட்டும் விதமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தேசிய உரிமைகள் கழக நிர்வாகிகளுக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 



கூடுதலாக மானாமதுரை ரயில்வே காலனி சேர்ந்த சூப்பர் காய்ஸ் குழுவினர், 20 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் தர்மா மற்றும் மானாமதுரை நகராட்சி வார்டு 19 மற்றும் 20 ஆகிய பகுதி பொதுமக்களின் சார்பாகவும் 2024 ஆம் வருடத்திற்கான தங்களின் ஒன்பதாம் ஆண்டு தண்ணீர் பந்தல் அமைத்து பக்தகோடி பெருமக்களின் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட தாகம் தீர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad