மானாமதுரை சித்திரை திருவிழா முதல் நாள் கலை நிகழ்ச்சி நடைபெறாதது ஏன்? பொதுமக்கள் கேள்வி - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 April 2024

மானாமதுரை சித்திரை திருவிழா முதல் நாள் கலை நிகழ்ச்சி நடைபெறாதது ஏன்? பொதுமக்கள் கேள்வி

 


மானாமதுரை சித்திரை திருவிழா முதல் நாள் கலை நிகழ்ச்சி நடைபெறாதது ஏன்? பொதுமக்கள் கேள்வி.



சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோயிலில் சித்திரை ஒன்றாம் தேதியான நேற்று கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழாவானது தொடங்கியது. வருடா வருடம் கொண்டாடப்படும் சித்திரை திருவிழா என்பது திருக்கல்யாணம் திரு தேரோட்டம் கள்ளழகர் வைகை ஆற்றலே இறங்கும் வைபோகம் ஆகியவை மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரையில் நடைபெறும் திருவிழாவானது மிகவும் பிரசித்திபெற்ற மற்றும் விசேஷமான ஒரு நிகழ்வாக தொன்று தொட்டு வரும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும்.

 


இதில் வெளியூர் வெளிநாட்டில் இருந்தாலும் இந்தப் பாரம்பரியத்தை கடைபிடிக்க மக்கள் அலைகடலென திரள்வது வழமையாகும். ஆகவே இவ்வாண்டும் சித்திரை திருவிழாவானது எப்பொழுதும் போல மானாமதுரை கலை கட்டத் தொடங்கியுள்ளது. மேலும் இது குறித்து பொதுமக்கள் பக்தர்கள் ஆகியோரிடம் கூடுதலாக விவரம் கேட்டபோது அவர்களில் ஒரு சிலர், சித்திரைத் திருவிழாவானது பொதுமக்களுடன் பின்னிப்பிணைந்த ஒரு பாரம்பரிய விசேஷமாகும் எனவும், இத்திருவிழா நம்முடைய நாகரிகம் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கக் கூடிய ஒரு சம்பிரதாயமாகும் எனவும், குறிப்பாக மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஒன்றாம் நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதிலும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது பொதுமக்கள்  பக்தர்களிடையே மிகவும் வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும். 



ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஒன்றாம் நாள் திருவிழாவின் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறாதது தங்களை மிகவும் ஏமாற்றமும், வருத்தமும் அடைய செய்வதாக சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தெரிவித்து கொண்டனர். எனவே ஒன்றாம் நாள் திருவிழா கலை நிகழ்ச்சி நடைபெறாதது குறித்து கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு தக்க பதில் அளிக்க வேண்டி கொள்வதாகவும் பொதுமக்கள் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad