ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக வேட்பாளருக்கு இனிப்பு ஊட்டிய இஸ்லாமிய சிறுமிகள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 April 2024

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக வேட்பாளருக்கு இனிப்பு ஊட்டிய இஸ்லாமிய சிறுமிகள்.


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளருக்கு இஸ்லாமிய சிறுமிகள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேவியர் தாஸ் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட மறவமங்களம், முடிக்கரை, கஞ்சிப்பட்டி, பருத்தி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். 


இதில், மறவமங்களத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அங்கிருந்த இஸ்லாமிய சிறுமிகள் வேட்பாளர் சேவியர் தாஸிற்கு இனிப்புகளை ஊட்டி விட்டு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சிறுமிகளுக்கு வேட்பாளரும் இனிப்புகளை ஊட்டிவிட்டதுடன் அங்கிருந்த பொது மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad