மக்களவை தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை சிவகங்கை ஆட்சித் தலைவரிடம் அளித்தார் திரு கார்த்திக் ப. சிதம்பரம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 March 2024

மக்களவை தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை சிவகங்கை ஆட்சித் தலைவரிடம் அளித்தார் திரு கார்த்திக் ப. சிதம்பரம்.


தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்கள் திங்கட்கிழமை பகல் 12 மணி அளவில் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்களிடம் தனது வேட்புமனுவை அளித்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ‌. தமிழரசிரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 


தொடர்ச்சியாக தனது வேட்பு மனுவை அளித்த பின்னர் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திரும்பிய திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களை மாவட்ட இளைஞர் காங்கிரஸ், மாவட்ட மகிளா, காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை, மாவட்ட மாணவர் காங்கிரஸ் மற்றும் நகர, பேரூர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர். 

அதன் பின்னர் மாண்புமிகு முன்னாள் நிதி அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் திரு ப. சிதம்பரம், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் திரு கார்த்திக் ப. சிதம்பரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும் இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மையம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


இதில் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு புருஷோத்தமன் அவர்களின் தலைமையில் மானாமதுரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களுக்கு மாலை அணிவித்து தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad