மானாமதுரையில் எம். எஃப். சி மற்றும் எஸ். பி. எஃப். சி ஆகிய நண்பர்கள் குழு இணைந்து நடத்தும் 13 ஆம் ஆண்டு மின்னொளி கையுந்துபந்து போட்டி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி சிலை பின்புறம் நூலகம் அருகில் உள்ள மானாமதுரை சுந்தரபுரம் ஊரணி திடலில் கறிக்கடை போஸ் மற்றும் தெற்கு ரயில்வே ஊழியர் சக்திவேல் ஆகியோரின் நினைவாக எம். எஃப். சி மற்றும் எஸ். பி. எஃப். சி ஆகிய நண்பர்கள் குழு இணைந்து நடத்தும் 13 ஆம் ஆண்டு மின்னொளி கையுந்துபந்து போட்டி மார்ச் 27 28 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. இதில் சிறப்பு பரிசாக ரூபாய் 30 ஆயிரத்தை பொறியாளர் எஸ். பி. சந்திரமோகன் அவர்கள் வழங்கினார். கூடுதலாக முதல் பரிசான ரூபாய் 15 ஆயிரத்தை பால்பண்ணை அருண் - சரவணன் ஆகியோரும், இரண்டாம் பரிசான ரூபாய் 12 ஆயிரத்தை ஏழாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாரி கண்ணன் அவர்களும், மூன்றாம் பரிசான ரூபாய் 9 ஆயிரத்தை பாஜக கட்சியை சேர்ந்த கௌதம் - முனியசாமி ஆகியோரும், நான்காம் பரிசான ரூபாய் 6 ஆயிரத்து அறம் பில்டிங் சர்வீஸ் ஆகியோரும், ஐந்தாம் பரிசான ரூபாய் ஐந்தாயிரத்தை திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் (எ) குட்டியும், வெற்றிக் கோப்பையை தெற்கு ரயில்வேயை சேர்ந்த அருண் சக்திவேல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் ஆகியோரும் வழங்கினார்கள். மேலும் இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பல மாவட்டங்களில் இருந்தும் பல குழுக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களின் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்ந்து பரிசுகளை அள்ளிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment