மானாமதுரையில் மனைவியை மானபங்கப்படுத்திய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 March 2024

மானாமதுரையில் மனைவியை மானபங்கப்படுத்திய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கட்டனூர் பகுதியில் உள்ள செந்தியட்டியேந்தல் கிராமத்தை சேர்ந்த சரவணகுமார் மனைவி சோபியா என்பவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி மானாமதுரை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  அப்புகாரில் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் என்பவர் அத்துமீறி தனது வீட்டிற்குள் நுழைந்து தனது மார்பை பிடித்து மானபங்கப்படுத்தி, தகாத வார்த்தையில் திட்டி கீழே தள்ளி தன்னை தாக்கியதாகவும் இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னை மானபங்கப்படுத்தி தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மானாமதுரை காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்ற விரக்தியில் சோபியாவின் கணவர் சரவணகுமார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புகார் மனு எழுதியுள்ளார். அம்மனுவில் கடந்த மாதம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் மனு மீது காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும், இதனால் தன் மனைவி தற்கொலை எண்ணத்தில் இருந்து வருவதாகவும், தன் மனைவியை மானபங்கப்படுத்திய கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மீதும் துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை வலியுறுத்திக் கொண்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad