சிவகங்கையில், விவசாயிகள் போராட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 March 2024

சிவகங்கையில், விவசாயிகள் போராட்டம்.


டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, சிவகங்கை ரயில் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் எல்.ஆதிமூலம் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை ரயில் நிலைய முன்பாக திரண்டவிவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னதாக கண்டனம் முழக்கமிட்டனர். நாடு தழுவிய ரயில் மறியல்போராட்டம் நடந்து வரும் நிலையில், சிவகங்கையிலும் மத்திய மோடி அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


டெல்லியில் போராடும் விவசாயிகளை சுட்டுக்கொல்லாதே, குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், வேளாண் கடன் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கண்டனம் முழக்கமிட்டனர்.


பின்னர், ரயில் நிலையம் செல்ல முற்பட்டவர்களை போலீசார் தடுத்து அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். ஐக்கிய விவசாயிகள் சங்க  நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று கைதானர்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad