மானாமதுரை நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 March 2024

மானாமதுரை நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் தலைமை தாங்கி புதிய கட்டிடத்தில் குத்து விளக்கேற்றினார். அதனைத் தொடர்ந்து மானாமதுரை நகர் மன்ற அலுவலகத்தில் நகராட்சி அலுவலர்கள் சார்பாக உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் விதமாக கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி அவர்கள் தன் சார்பாகவும் நகராட்சி அலுவலர்கள் சார்பாகவும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 


மேலும் இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் கழகச் செயலாளர் க. பொன்னுச்சாமி, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, அரசு அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி, நகர மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், நகர மன்ற உறுப்பினர்கள் சித்ரா மன்னர் மன்னன், சதீஷ்குமார், லட்சுமி சங்கிலி சண்முகப்பிரியா, சத்யா, பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad