சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் உலக மகளிர் தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நகர் மன்ற உறுப்பினர்கள் நதியா, சண்முகப்பிரியா, காளீஸ்வரி மற்றும் மானாமதுரை வழக்கறிஞர் சங்கம் இணைச் செயலாளர் சிவகாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில் மானாமதுரை மிளகனூர் செவிலியர்கள், ஆழந்தூர், கீழப்பசலை பெண் கிராம நிர்வாக அலுவலர்கள், பெற்றோர்கள், வழக்கறிஞர்கள், பெண் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக சிறப்பு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பள்ளி மாணவிகள் சென்று பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் திருமதி இராஜேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் ஆர். கபிலன் மற்றும் ஆட்சியர் ஆர். மீனாட்சி முன்னிலை வகித்தனர். இப்பள்ளியின் முதல்வர் எம். சாரதா மற்றும் பொறுப்பாசிரியர் பாண்டியம்மாள் இவ்விழா ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment