சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பாக இலக்கிய விழா கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தா லட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த இலக்கிய விழாவில் ஆங்கிலத் துறை இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவர் சரண் வரவேற்புரை ஆற்றினார்.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் அருள்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு Digital Humanities என்ற தலைப்பில் இன்றைய விஞ்ஞான உலகில் புதிய டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஆங்கில இலக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி சிறப்பு சொற்பொழிவாற்றினார். கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ஜெயசாலா வாழ்த்துரை வழங்கினார். இரண்டாம் ஆண்டு இளநிலை மாணவி சினேகா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment