பல்வேறு செயல்பாடுகள் மூலம் பிரெஞ்சு மொழியின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை ஆராய்ந்து அறிந்து கொள்வதற்காக இந்நாளை பிரெஞ்சு துறையை சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது. மேலும் கவிதை வாசித்தல், பாடல் பாடுதல், பிரெஞ்சு பிரபலங்கள் பற்றிய காணொளிக் காட்சி போன்ற கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு கூடுதலாக சில சுவையான பிரெஞ்சு உணவுகளையும் பள்ளியில் தயார் செய்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வின்போது பள்ளியின் சேர்மன் உயர்திரு. எஸ். பி. குமரேசன் மற்றும் துணை சேர்மன் திரு கே. அருண்குமார் அவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள். முதல்வர் திருமதி உஷா குமாரி, துணை முதல்வர் திருமதி பிரேம சித்ரா, பிரெஞ்சு ஆசிரியர் எஸ். மணிகண்டன் மற்றும் பிரெஞ்சு துறைத் தலைவர் சி. பி. ருத்ரா தேவி ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். பிரெஞ்சு பிரதிநிதிகளான ஜூன்மார்டெல், டேவிட் மற்றும் எஸ்டெல் ஆகியோர் பிரான்சில் இருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் தங்கள் வாழ்த்துக்களைத் அனுப்பியுள்ளனர் என்பது இந்நிகழ்வின் சிறப்பம்சமாக குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment