தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மூலமாக சிறந்த கலைஞர்களை பாராட்டு வகையில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழு மூலமாக சுமார் 30 நபர்களை கலைப் புலமைகளின் அடிப்படையில் கலை இளமணி, வளர்மணி, சுடர்மணி, நன்மணி, முதுமணி ஆகிய விருதுகளுக்கு தேர்ந்தெடுத்தனர்.
இதில் 'கலை இளமணி' விருதை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள வீரவிதை சிலம்பாட்ட அணியை சேர்ந்த மாணவர் சிவா பெற்றுள்ளார். வீரவிதை சிலம்பாட்ட குழுவின் மாணவர் சிவா அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் விருதை வழங்கி தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இவ்விருது பெற துணையாக இருந்த மாஸ்டர் கலை வளர்மணி டாக்டர் பெருமாளை மானாமதுரை சுற்றுவட்டார நகர் மற்றும் கிராம பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment