அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறையில்1982 -1985 ஆம் கல்வியாண்டில் இயற்பியல் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து அவர்கள் பயின்ற கல்லூரியின் இயற்பியல் துறையில் ஸ்மார்ட் வகுப்பறைக்காக ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமையேற்று சிறப்பித்த இந்நிகழ்வில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை முன்னாள் மாணவரும் தற்போதைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத் தலைவருமான முனைவர் ராக்கப்பன் முன்னிலை வகிக்க, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ரவி ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் துறைத்தலைவர் கவிதா, பேராசிரியர்கள் ஆசைத்தம்பி, தெய்வமணி, கெளரவ விரிவுரையாளர் சுந்தரம் மற்றும் ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment