மேலும், போக்கு வரத்து துறையில் காலிபணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தயாராக உள்ள நிலையில், விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தவர், எஞ்சிய காலி பணியிடங்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிரப்பப்படும் என்றும் கூறினார், தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியவர், பேருந்துகளில், வாகனங்களில் அதனைப் பயன்படுத்தினால் துறை அதிகாரிகள் மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
தமிழக அரசின் சார்பில் 2000 புதிய பேருந்துகள் மற்றும் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,200 பேருந்துகள் என 4,200 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, பேருந்துகள் கட்டுமான பணி நடைபெற்று படி படியாக, இயக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 3000 பேருந்துகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கப்படும் நிலையில், பழைய பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்படும். சிவசங்கர் என்றும் கூறினார்.
- சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்.
No comments:
Post a Comment