சிவகங்கை வார சந்தை பிரதான சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பாக சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்தல் பத்திர திட்ட விவகாரத்தில் வங்கியின் முறைக்கேடுகளையும், ஆளும் பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் ஒருதலைப்பச்சமான செயலையும் கண்டித்து மாபெரும் கண்டன பெருந்திரல் போராட்டம் நடைபெற்றது.
இதில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார். இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாநில மாவட்ட நகர வட்டார பேரூர் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment