சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சூராணம் ஊராட்சி பகுதியில் ரூபாய் 140 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கான அடிக்கலை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் நாட்டினார். அதனைத் தொடர்ந்து சூராணம் ஊராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு நிறைவடைந்த பயணியர் நிழற்குடையையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ்மாறன் அவர்கள், ஒன்றிய கவுன்சிலர் செழியன், கிளை கழகச் செயலாளர்கள், திமுக கட்சியின் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவ செவிலியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment